சுடச்சுட

  

  வேலூர் கொணவட்டம் ரஹீம் சாகிப் தெருவைச் சேர்ந்த இறைச்சிக் கடைக்காரர் மகபூப்பாஷா (35).

  இவர் அண்மையில் அதிகாலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியில் சென்று, மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த ரூ.60 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.

  புகாரின்பேரில் வேலூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

  கல்லூரியில் ரூ.3 லட்சம் திருட்டு

  கணியம்பாடியை அடுத்த வல்லம் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில் பூட்டியிருந்த பீரோவில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்கம் திருட்டு போனது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

  புகாரின்பேரில் வேலூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

  டிரைவர் தற்கொலை வழக்கில் பெண் உட்பட மூவர் கைது

  வாலாஜாபேட்டை, ஜூலை 28: காவேரிப்பாக்கம் பஸ் நிலையப் பகுதியில் கடந்த 20ஆம் தேதி நின்றிருந்த காரில், காஞ்சிபுரம் மாவட்டம் விசார் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கால் டாக்ஸி டிரைவர் முருகன் (25) என்பவர் இறந்து கிடந்தது தெரியவந்தது.

  புகாரின்பேரில் காவேரிப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் சோமசுந்தரம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார்.

  அப்போது முருகன் திருவலம் அருகேயுள்ள நெ 66 புதூர் கிராமத்தைச் சேர்ந்த, திருமணமாகி கணவரைப் பிரிந்த கனகாவிடம் செல்போனில் பேசியுள்ளது தெரியவந்தது.

  திருவலத்தில் இருவரும் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்ததும், முருகனுக்கு திருமண ஏற்பாடு வீட்டில் செய்யவிருந்ததையறிந்து கனகா தகராறு செய்ததும் தெரியவந்தது.

  சம்பவத்தன்று முருகன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதும், இதையடுத்து, கனகா அதே ஊரைச் சேர்ந்த டிரைவர்களான மணிகண்டன் (23), ராஜா (23) ஆகியோரின் உதவியுடன் சடலத்தை காஞ்சிபுரத்துக்கு எடுத்துச் சென்றபோது காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் அருகே காரின் டயர் பஞ்சர் ஆனதால் காரை விட்டு வந்ததும் தெரியவந்தது.

  இதையடுத்து, மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.

  வீடு புகுந்து திருட்டு; இளைஞர் கைது

  அரக்கோணம், ஜூலை 28: தக்கோலம் சஞ்ஜிவிராயன்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

  கடந்த 21ஆம் தேதி இவர் தனது குடும்பத்தினருடன் திருப்பதி சென்று திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் ஒரு அறையில் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகைகள் திருடு போயிருந்தன.

  இதுதொடர்பாக ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்த மணியின் மகன் தினேஷ் (23) ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

  வரதட்சிணை: கேபிள் டி.வி. ஆபரேட்டர் கைது

  அரக்கோணம் ரயில்வே ஊழியர் குடியிருப்பைச் சேர்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர் ஸ்ரீதர் (41). இவரது மனைவி கீதா (30). 2 குழந்தைகள் உள்ளனர்.

  இந்நிலையில், குடும்பத் தகராறு காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன் கீதா பெங்களூரில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டாராம்.

  இந்நிலையில், கடந்த ஒரு வருடமாக ஸ்ரீதர் பெங்களுர் செல்லவில்லையாம்.

  இதனால் சந்தேகமடைந்த கீதா, தனது குழந்தைகளுடன் அரக்கோணம் வந்து பார்த்தபோது, ஸ்ரீதர் வேறு ஒரு பெண்ணைக் காதலித்து வருவது தெரியவந்தது. இதுகுறித்து கீதா கேட்டபோது, ரூ.10 லட்சத்தை வரதட்சிணையாக ஸ்ரீதர் கேட்டாராம்.

  புகாரின்பேரில் அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சரஸ்வதி வழக்குப் பதிந்து, ஸ்ரீதரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தார்.

  வளையல் வியாபாரி தற்கொலை

  அரக்கோணம் பழனிப்பேட்டை குருசாமி தெருவைச் சேர்ந்த முனீர் உசேனின் மகன் அப்துல்கரீம் (33). வளையல் வியாபாரி. இவரது மனைவி ஷகிலா பேகம் ஆறு மாத கர்ப்பிணி.

  இந்நிலையில் அண்மையில் அப்துல்கரீம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் புடவையால் தூக்கிட்டுக் கொண்டாராம். இதில், அவர் இறந்தார்.

  வெளியூரில் இருந்து இரு நாள்களுக்குப் பிறகு திரும்பியபோதுதான் இச்சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினருக்கே தெரியவந்துள்ளது.

  இளம்பெண் காணவில்லை

  தக்கோலம் அருகேயுள்ள புதுகேசாவரம் செக்போஸ்ட்டைச் சேர்ந்த அன்வர்பாஷா மகள் பசிஹா (25). இவர் கடந்த 22ஆம் தேதி முதல் காணாமல் போனதாக தக்கோலம் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai