Enable Javscript for better performance
லாரி கவிழ்ந்து இருவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசி அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.

     வந்தவாசியை அடுத்த முருக்கேரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரவி (45)-பூங்காவனம்(38) தம்பதியர். இவர்களது மகன்கள் பவானிசங்கர் (15), வினோத்குமார் (13), மகள் தீபா (11) ஆகியோருக்கு மேல்மலையனூரில் காதணி விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

    இதற்காக லாரியில் சுமார் 75-க்கும் மேற்பட்டோர் மேல்மலையனூர் சென்றுள்ளனர்.

    விழா முடிந்து ஞாயிற்றுக்கிழமை இரவு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். வந்தவாசி-விளாங்காடு சாலையில் ஆரியாத்தூர் அருகே செல்லும்போது எதிரே வந்த அரசு பேருந்துக்கு வழிவிட ஒதுங்கியபோது லாரி சாலையோரம் பக்கவாட்டில் கவிழ்ந்தது. இதில் முருக்கேரியைச் சேர்ந்த சண்முகம் (37), பி.சரோஜா (61) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 

    மேலும் முருக்கேரியைச் சேர்ந்த முருகேசன் (70), அம்பிகா (30) உள்ளிட்ட 10 பேர்  காயமடைந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai