Enable Javscript for better performance
வாணியம்பாடி காவல் நிலைய ஆய்வாளர் இடமாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    வாணியம்பாடி காவல் நிலைய ஆய்வாளர் இடமாற்றம்

    By வாணியம்பாடி  |   Published on : 29th July 2013 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாணியம்பாடி காவல் நிலைய ஆய்வாளர் ராஜேந்திரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின்பேரில், வாணியம்பாடி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நெக்குந்தியில் ஹோட்டலில் காவல் ஆய்வாளர் சிவலிங்கம், தனிப்படை உதவி ஆய்வாளர் ரபீக் மற்றும் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை மாலை சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது விபசாரத்தில் ஈடுபட்டதாக 3 பெண்கள் மற்றும் உடந்தையாக இருந்ததாக 3 ஆண்கள் என 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, வாணியம்பாடி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ராஜேந்திரனை  ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்ய காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai