சுடச்சுட

    

    கே.வி.குப்பத்தை அடுத்த பி.கே.புரத்தைச் சேர்ந்தவர் கங்காதரன் (75). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நீலகண்டபாளையம் அருகே குடியாத்தம்-காட்பாடி சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.

    அப்போது அதிமுக சார்பில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கி குடியாத்தம் காந்தி நகரிலிருந்து, காட்பாடிக்கு மோட்டார் சைக்கிள் பேரணி அவ்வழியே சென்றது.

    பேரணியில் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கங்காதரன் காயமடைந்து வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    அங்கு சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

    லாரி மோதி வியாபாரி சாவு

    குடியாத்தம், ஜூலை 28: குடியாத்தம் அருணாச்சலம் நகரைச் சேர்ந்த மளிகைக்கடைக்காரர் வெங்கடேசன் (46).

    இவர் சனிக்கிழமை நள்ளிரவு பைக்கில், காட்பாடி சாலையில் சென்றுள்ளார். அப்போது சென்னையிலிருந்து பேர்ணாம்பட்டை நோக்கிச் சென்ற லாரி மோதியதில் படுகாயமடைந்து, வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இறந்தார்.

    இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்து, சென்னை போரூரைச் சேர்ந்த லாரி டிரைவர் செங்குட்டுவனை (40) கைது செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai