சுடச்சுட

  

  ம.பொ.சி. குறித்த தேசிய கருத்தரங்கை ஆகஸ்ட் 25ஆம் தேதி குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரி வளாகத்தில் நடத்துவது என குடியாத்தம் தமிழ்ச் சங்கம் முடிவு செய்துள்ளது.

  சித்தூர்கேட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  கருத்தரங்கில் ம.பொ.சி. குறித்த ஆய்வுக் கோவையை வெளியிடுவது, நிகழ்ச்சிக்கு வரும் ம.பொ.சி.யின் பேத்தி தி. பரமேஸ்வரிக்கு வரவேற்பு அளிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, குடியாத்தம் தமிழ்ச் சங்க நிறுவனர், குழந்தைக் கவிஞர் நீல. கணேசன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

  கூட்டத்துக்கு சங்கத் தலைவர் மு. காசிநாதன் தலைமை வகித்தார். சங்க பொதுச் செயலர் கவிஞர் பா. சம்பத்குமார் வரவேற்றார்.

  நிர்வாகிகள் த. ரவீந்திரநாத், ஆர். விஜயலட்சுமி, தமிழ் திருமால், கு. குணசேகரன், பேராசிரியர் எஸ். கருணாநிதி, ஆர்.இ. பாண்டியன், க. பைந்தமிழ்எழிலன், ஆர். பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai