சுடச்சுட

    

    ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்துக் கொள்ள ராணிப்பேட்டையில் 3, 4ஆம் தேதிகளில் சிறப்பு முகாம்

    By ராணிப்பேட்டை  |   Published on : 30th July 2013 02:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்துக் கொள்ள ராணிப்பேட்டை நகரில் ஆகஸ்ட் 3,4ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது என நகர்மன்றத் தலைவர் சித்ரா சந்தோஷம் கூறினார்.

    இந்நகர்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் அதன் தலைவர் சித்ரா சந்தோஷம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் பேசியதாவது:

    ஆர்.இ.எழில்வாணன்: ராணிப்பேட்டை நகரில் உள்ள உழவர் சந்தை, பெண்கள் பள்ளி, எஸ்எம்எச் மருத்துவமனை, காவல் நிலையம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சாலையில் பஸ் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். வசந்தம் அவென்யூ பகுதியில் ரூ.10 லட்சத்தில் தொடங்கப்பட்ட சாலைப் பணி முடிக்கப்படாமல் உள்ளது.

    ராமதாஸ்: ஆதார் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும்போது,  தெருவின் பெயரையும் இடம் பெறச் செய்ய வேண்டும்.

    சரவணன்: முத்துக்கடை பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை பராமரிக்கும் பணியை ஜி.கே.ரெடிமிக்ஸ் நிறுவனத்துக்கு ஒப்படைப்பது குறித்து பரீசிலிக்கலாம். காந்தி நகரில் கழிவுநீர்க் கால்வாயை சீரமைக்க வேண்டும்.

    உறுப்பினர்கள் தெரிவித்த புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்றத் தலைவர் சித்ரா சந்தோஷம் கூறினார். பின்னர் அவர் பேசியது:

    2010ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, பதிவு செய்யப்பட்டவர்களில் இதுவரை 65 சதவீதம் பேர் வரை ஆதார் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுத்துள்ளனர்.

    புகைப்படம் எடுக்காமல் உள்ளவர்கள் ஆகஸ்ட் 3,4ஆம் தேதிகளில் ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு முகாமில் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். ராணிப்பேட்டை நகரில் புதிய மின் விளக்குகள் பொருத்தும் பணி விரைவில் முடிக்கப்படும் என்றார். 

    நகர்மன்றத் துணைத் தலைவர் ஜே.பி.சேகர், ஆணையர் (பொறுப்பு) எஸ்.மணி, நகர்மன்ற உறுப்பினர் கே.பி.சந்தோஷம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai