Enable Javscript for better performance
\\\"ஆப்கா\\\'வில் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்- Dinamani

சுடச்சுட

    

    "ஆப்கா'வில் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்

    By வேலூர்  |   Published on : 30th July 2013 02:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூரில் உள்ள சிறை மற்றும் நிர்வாகச் சீர்திருத்தப் பயிலரங்கில் (ஆப்கா) பயிற்சியை நிறைவு செய்த 21 பேருக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    பயிலரங்கில் நன்னடத்தை அதிகாரிகளுக்கான 3 மாத கால அடிப்படை பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல், சிறை அதிகாரிகளுக்கான 9 மாத கால அடிப்படை பயிற்சி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பயிலரங்கத்தின் இயக்குநகர் அகமது தலைமை தாங்கினார். மத்திய உள்துறை இணைச் செயலர் சுரேஷ்குமார் பங்கேற்றார். ஆப்கா துணை இயக்குநர் பக்ருதீன் மற்றும் ஆப்கா பணியாளர்கள் பங்கேற்றனர்.

    இதில், தமிழகம், ஆந்திரம், கேரள மாநிலங்களைச் சேர்ந்த 21 அலுவலர்களுக்கு 3 மாத கால பயிற்சியை முடித்தமைக்கான விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    அத்துடன் சிறைத்துறை 9 மாதகால அடிப்படை பயிற்சி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 74 பேர், நாகலாந்தை சேர்ந்த இருவருக்கு தொடங்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai