சுடச்சுட

    

    இருளர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஜாதி சான்றிதழ், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட அரசின் சலுகைகளும், இருளர்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகளைச் செய்துதரக் கோரியும் ஒருங்கிணைந்த இந்திய குடியரசுக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

    ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாநிலப் பொதுச்செயலர் எஸ்.குணசேகரன் தலைமை தாங்கினார். தேசியத் தலைவர் ஏ.சஞ்சீவினார், துணைச் செயலர் எம்.எஸ்.மேச்சேரியார், மாநில அவைத்தலைவர் எ.பி.முருகேசன், துணைத் தலைவர் சின்னராஜ்,  நிர்வாகத் தலைவர் டி.புத்தபெருமாள், பொருளாளர் ஜெய்பீம்தாசன், மாவட்டத் தலைவர் ஆர்.சாவித்திரி, மகளிரணியின் மாநிலத் தலைவி எம்.ஜெசிமாரிமுத்து, விவசாய அணியின் மாநிலத் தலைவர் வி.பி.எம்.சுப்பிரமணி, நகரத் தலைவர் ஜெ.ஐயப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர் கோட்டாட்சியர் மு.பிரியதர்ஷினியிடம் இவர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai