சுடச்சுட

  

  பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளையொட்டி, ஜோலார்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 130-வது பூத் இளைஞர் காங்கிரஸ் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் விழிலென்ஸ் பொருத்தும் முகாம் வெலக்கல்நத்தில் அண்மையில் நடைபெற்றது .

  முகாமுக்கு பூத் கமிட்டி தலைவர் சத்தியகுமார் தலைமை வகித்தார். கே.கருணாகரன் வரவேற்றார்.

  முகாமை காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏகாம்பவாணன்,  இளைஞர் காங்கிரஸ் மாநிலப் பொதுச்செயலர் அருவிபாபு, விவசாயப் பிரிவின் மாவட்டத் துணைத் தலைவர் கே.நந்தகுமார் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

  திருவண்ணாமலை ரமண மகரிஷி கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் 230 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர்.

  காங்கிரஸ் மாவட்டப் பொதுச் செயலர் பரந்தாமன், நிர்வாகிகள் வினோத், ஸ்ரீனிவாஸ், பிரசாத், லட்சுமணன், தியாகராஜன், கேசவன், அருள், இம்தியாஸ், கணபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai