சுடச்சுட

    

    வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், 614 மனுக்கள் பெறப்பட்டன.

    இம்மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் பொ.சங்கர் உத்தரவிட்டார்.

    மாவட்டத்தில் முதன் முறையாக மகளிர் திட்டம் மற்றும் புதுவாழ்வுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள 15 உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை ஆட்சியர் வழங்கினார். மாநில அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கு சென்னையில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகையை காசோலையாக வழங்கினார்.

    வீட்டு மனைப் பட்டா கோரி..

    மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என முன்னாள் எம்எல்ஏ ஜி.லதா தலைமையில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai