சுடச்சுட

    

    குழந்தை இறந்து பிறந்த நிகழ்வில் அரசு மருத்துவர் மற்றும் செவிலியரின் அலட்சியப் போக்கு இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று விசாரணை அதிகாரியும், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநருமான து.ஆ.சு.குமார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

    பிரசவ நோயாளி மூதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து காலை 7.45 மணியளவில் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரசவத்துக்காக வந்துள்ளார். அவர் வந்ததும் உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அப்போது குழந்தையின் இதய துடிப்பு கேட்காததை அடுத்து அவருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அத்துடன் 10.05 மணியளவில சுகப்பிரசவம் நடந்தது.

    இறந்து பிறந்த குழந்தையின் தோல் பகுதிகள் ஆங்காங்கே உரிந்து காணப்பட்டதை நோயாளியிடமும், அவரது கணவரிடமும் மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர்.

    இக்குழந்தை 24 மணி நேரத்துக்கு முன்பே இறந்திருக்கும் என்பதும் தெரியவந்துள்ளது. இதில் மகப்பேறு மருத்துவர் மற்றும் ஊழியர்களின் அலட்சியப்போக்கு இருந்ததாகத் தெரியவில்லை. தாய் தொடர்ந்து அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றார் குமார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai