சுடச்சுட

  

  கர்நாடக மாநிலத்தில் கொத்தடிமைகளாக இருந்த வேலூரைச் சேர்ந்த 5 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.

  வேலூரை அடுத்த வசந்தநடை கிராமத்தைச் சேர்ந்தவர் மாயப்பன். இவரது குழந்தைகள் பபிதா (12), கவிதா (10), துர்கா (2), வல்லரசு (7), பேரரசு (3) ஆகியோரை மைசூர் அருகேயுள்ள கெம்பி கவுடா உண்டி பண்ணையில் கொத்தடிமைகளாக இருந்தனராம்.

  தகவலின்பேரில் இக்குழந்தைகளை மைசூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மீட்டு, மைசூர் பாபுஜி இல்லத்தில் தங்க வைத்திருந்தார்.

  ஆட்சியர் பொ.சங்கரின் உத்தரவின்பேரில் இவர்கள்

  5 பேரையும் வேலூர் குழந்தைத் தொழிலாளர் நல்வாழ்வு இயக்க திட்ட இயக்குநர் மு.ராஜபாண்டியன் மற்றும் கள அலுவலர் சீ.கேசவன், சமூக சேவகர் ஆர்.குமரேசன் ஆகியோர் வேலூருக்கு அழைத்து வந்தனர்.

  இக்குழந்தைகளை மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்த ஆட்சியர், விடுதியில் சேர்த்து படிப்பதற்கான நடவடிககை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai