சுடச்சுட

  

  சிறை, காவல் துறைகளை நவீனப்படுத்தமத்திய அரசு நடவடிக்கை

  By வேலூர்,  |   Published on : 30th July 2013 02:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாட்டில் சிறை, காவல் துறை நிர்வாகங்களை நவீனப்படுத்தும் நடவடிக்கைகளை விரைவில் மத்திய அரசு எடுக்கவுள்ளது என்று மத்திய உள்துறை இணைச் செயலர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்தார்.

  வேலூரில் உள்ள சிறை மற்றும் நிர்வாக சீர்திருத்த பயிலரங்கு விழாவில் திங்கள்கிழமை பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியது: சிறைத் துறை நிர்வாகத்தை நவீனமயமாக்கும் திட்டத்தில் அனைத்து மாநிலங்களிலும் சிறை நிர்வாக வழிமுறைகள் கொண்ட ஆவணம் உருவாக்கப்படும். நாட்டில்  கொண்டு வரப்படும் சிறைத்துறை சட்டம் சிறை நிர்வாக முறையை நவீனப்படுத்தும் திட்டமாக அமையும். அத்துடன் சிறைத்துறை நிர்வாகத்தில் முழுமையான மாற்றத்தை கொண்டு வரவும் வழிவகுக்கும்.

  கைதிகளை எப்படி கையாள்வது, சிறு குற்றங்களில் ஈடுபடுவோரை சிறையில் அடைக்காமல் அவர்களின் மறுவாழ்வுக்கான திட்டங்களை செயல்படுத்துவது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகள் கொண்டு வரப்படவுள்ளது. நாட்டில் 90 கோடி செல்போன்கள் உபயோகத்தில் உள்ளன. இதனால் சைபர் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. இது சிறைத் துறைக்கும், காவல்துறைக்கும் சவாலாக அமைந்துள்ளது என்றார் சுரேஷ்குமார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai