சுடச்சுட

    

    செல்போன் பறிமுதல் வழக்கு:நீதிமன்றத்தில் நளினி ஆஜர்படுத்தப்படவில்லை

    By வேலூர்,  |   Published on : 30th July 2013 02:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் மத்திய பெண்கள் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி நளினி, செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்படவில்லை.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி தனிச் சிறையில் உள்ளார். அவரது அறையில் இருந்து 2010 ஏப்ரல் 20ஆம் தேதி செல்போன், சிறுகத்தி ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக பாகாயம் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனர்.

    இவ்வழக்கு வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் விசாரணைக்கு கடந்த மாதம் வந்தது. அப்போது ஜூலை 29-ம் தேதி நீதிமன்றத்தில் இவ்வழக்கில் ஆஜர்படுத்துமாறு மாஜிஸ்திரேட் மும்மூர்த்தி உத்தரவிட்டார். சிறையில் உள்ள நளினியிடம் அந்த உத்தரவு கடந்த மாதம் 29ஆம் தேதி வழங்கப்பட்டது.

    இவ்வழக்கில் போலீஸார் நளினியைக் கைது செய்யவில்லை. அதனால் அவரை முறைப்படி போலீஸார் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்துவதில் குழப்பம் ஏற்பட்டது. அதனால் அவர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்படவில்லை என காவல் துறையினர் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai