சுடச்சுட

    

    அரசு அறிவித்த தென்பெண்ணை-பாலாறு இணைப்பு கால்வாய் திட்டத்துக்கு விரைவாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

    வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திங்கள்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலர் சி.கே.தனபால் தலைமை தாங்கினார்.

    விவசாயிகளின் அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் 70 சதவீதம் முன்னுரிமையை விவசாயம் சார்ந்த கிராமப்புற இளைஞர்களுக்கு அளிக்க வேண்டும் என்பன  ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

    மாநிலத் தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி, மாவட்டத் தலைவர் கே.கண்ணைய நாயுடு, நிலத்தடி நீர் ஆய்வாளர் கே.சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai