சுடச்சுட

    

    பாதாள சாக்கடை திட்டப் பணியில் ஈடுபட்ட 2 தொழிலாளர்கள் மயக்கம்

    By வேலூர்  |   Published on : 30th July 2013 02:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் மாநகரில் பாதாள சாக்கடை திட்டப் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்ட இரு தொழிலாளர்கள் மயக்கமடைந்தனர்.

    இத்திட்டத்தின்கீழ் காட்பாடி சாலையில், நேஷனல் திரையரங்கும் அருகே தேசிய நெடுஞ்சாலை வரை கழிவுநீர் கொண்டு செல்லும் பெரிய குழாய் அமைக்கும் பணி  நடைபெறுகிறது.

    இப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடை குழாய் மூடியை திறந்து 13 அடி ஆழமுள்ள பள்ளத்தை சீரமைக்கும் பணியில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பப்லூ (30), வேலூர் மாவட்டம், ஓச்சேரியைச் சேர்ந்த விஜி (24) ஆகியோர் திங்கள்கிழமை இறங்கினர். அப்போது இருவரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர். விஷவாயுவால் இவர்கள் மயக்கமடைந்ததாகக் கருதி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, இருவரையும் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் சிகிச்சைக்குப் பிறகு மாலையில் திரும்பினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai