Enable Javscript for better performance
பிரசவத்தின்போது இறந்து பிறந்த குழந்தை;மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்- Dinamani

சுடச்சுட

    

    பிரசவத்தின்போது இறந்து பிறந்த குழந்தை;மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

    By அரக்கோணம்  |   Published on : 30th July 2013 02:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரக்கோணம் அரசினர் மருத்துவமனையில் பிரசவத்தின்போது குழந்தை இறந்தது. இதையடுத்து, மருத்துவமனையை முற்றுகையிட்ட குழந்தையின் உறவினர்களை எம்எல்ஏ சு.ரவி சமரசம் செய்தார்.

    அரக்கோணத்தை அடுத்த தணிகைபோளூரைச் சேர்ந்தவர் ரமேஷ்பாபு (29). இவரது மனைவி அமுலு (27). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள்.

    நிறைமாத கர்ப்பிணியான அமுலு பிரசவத்துக்காக திங்கள்கிழமை காலை மூதூர் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அரக்கோணம் அரசினர் மருத்துவமனைக்கு காலை 8.45 மணிக்கு அமுலு அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, 10.05 மணிக்கு அமலுவுக்கு ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது.

    இந்நிலையில், மருத்துவர்களின் அஜாக்கிரதையால்தான் குழந்தை இறந்தது எனக்கூறி அமுலுவின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

    மேலும், மருத்துவர்களிடம் தகராறு செய்தனராம்.

    தகவலின்பேரில் எம்எல்ஏ சு.ரவி, வட்டாட்சியர் கார்த்திகேயன் ஆகியோர் அங்கு வந்து, சமரசம் செய்தனர். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

    அலட்சியத்தாலே

    குழந்தை இறந்ததாக தந்தை புகார்

    இதுகுறித்து அமுலுவின் கணவர் ரமேஷ்பாபு கூறியதாவது: மருத்துவமனையில் காசு கொடுப்பவர்களுக்கு மட்டுமே சரியாக பிரசவம் பார்க்கிறார்கள்.

    எனது மனைவியை மிகவும் இக்கட்டான நிலையில் முதூரிலிருந்து இங்கு அழைத்து வந்த போதும் என்னிடம் எவ்வளவு காசு வைத்திருக்கிறாய் என தான் முதலில் கேட்டனர். காசு கொடுக்காததால், அலட்சியமாக பிரசவம் பார்த்ததாலேயே குழந்தை இறந்து விட்டது என்றார்.

    24 மணி நேரத்துக்கு

    முன்பே இறந்துவிட்டதாக

    மருத்துவர் விளக்கம்

    இச்சம்பவம் குறித்து அரக்கோணம் அரசினர் மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜீவாஇளங்கோவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: அமுலுவுக்கு கடந்த 2 நாள்களாக ஜுரம் இருந்திருக்கிறது. இதை அவர் குடும்பத்தினரிடம் சொல்லவில்லை. முதூரில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பிரசவத்தில் சிக்கல் இருப்பதால் இங்கு அனுப்புவதாக அவர்கள் எழுதி அனுப்பிவிட்டனர். நாங்கள் பிரசவம் பார்த்தநிலையில் அப்பெண்ணுக்கு ஆண் குழந்தை வயிற்றிலேயே இறந்தே பிறந்தது.

    சோதனை செய்ததில் அக்குழந்தை 24 மணி நேரத்துக்கு முன்பே இறந்திருப்பது தெரிய வந்தது. அவருக்கு அதிகமான அதாவது 100 டிகிரிக்கு மேல் ஜுரம் இருந்ததால் அது குழந்தையை பாதித்துள்ளது. ஒரு நாளைக்கு முன்பே இங்கு வந்திருந்தால் ஜுரத்தை குறைத்து குழந்தையை காப்பாற்றி இருக்க வாய்ப்புகள் உண்டு என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai