சுடச்சுட

  

  அம்மிக்கல்லால் மகன் தாக்கியதில் காயமடைந்த தந்தை சாவு

  By அரக்கோணம்,  |   Published on : 31st July 2013 01:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரக்கோணம் நகரில் குடும்பத் தகராறில் கடந்த 6ந் தேதி தலையில் அம்மிக்கல்லை போட்டதில் படுகாயமடைந்த ஓய்வுபெற்ற போலீஸ்காரர்   செவ்வாய்க்கிழமை காலை இறந்தார். இதையடுத்து கொலைமுயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அவரது மகன் மீது கொலை வழக்கை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.

  அரக்கோணம் அசோக் நகரை ஒட்டிய அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்தவர் அருள் (55). தமிழக காவல் துறையில் காவலராக பணிபுரிந்து விருப்ப பணி ஓய்வு பெற்றவர். இவரது மகன் மைக்கேல் (25), கார் டிரைவர். மைக்கேல் அவரது மனைவியை தினமும் மது குடித்து விட்டு தாக்கியுள்ளார். மருமகளை ஏன் அடிக்கிறாய் எனக் கேட்டு மகன் மைக்கேலை அருள் தட்டிக் கேட்டுள்ளார்.

  அப்போது திடீரென மைக்கேல் அங்கிருந்த அம்மிக்கல்லை தூக்கி தந்தையின் தலையில் போட்டாராம்.

  இதில் பலத்த காயமடைந்த அருள், சென்னை அரசினர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து அப்போது வழக்கு பதிந்த அரக்கோணம் டவுன் போலீஸார், மைக்கேலை கைது செய்து கொலை முயற்சி வழக்கு தொடர்ந்து சிறையில் அடைத்தனர்.

  இந்நிலையில் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருள் செவ்வாய்க்கிழமை காலை இறந்தார். இதையடுத்து சிறையில் இருக்கும் மைக்கேல் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸார் மேலும் தீவிர விசாரணை செய்து வரு

  கின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai