சுடச்சுட

    

    தட்சிண பாரத ஹிந்தி பிரசார சபையின் ஹிந்தி தேர்வுகள் வரும் ஆகஸ்ட் 10 ,11}ம் தேதிகளில் நடைபெறுகின்றன.

    இதுகுறித்து பிரசார சபையின் செயற்குழு உறுப்பினர் க.ராஜா வெளியிட்ட அறிக்கை விவரம்:

    வேலூர் மாவட்டத்தில் பிராத்மிக் ஹிந்தி தேர்வு வேலூர், தோட்டப்பாளையம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் தேதி நடைபெறுகிறது. மத்யமா மற்றும் ராஷ்டிரபாஷா தேர்வுகள் காட்பாடி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் தேதி காலை மற்றும் மாலை நடைபெறுகிறது.

    மேல்நிலைத் தேர்வுகளான பிரவேசிகா, விஷாரத் இரு நிலைகள் மற்றும் பிரவீண் இரு நிலைகள் தேர்வு காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

    ஹிந்தி தேர்வு எழுதவுள்ள தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 4-ம் தேதி தட்சிண பாரத ஹிந்தி பிரசார சபை, வேலூர் கிளையில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுகிறது.

    அப்போது அனுபவமிக்க ஆசிரியர்கள் தேர்வு குறித்த குறிப்புகள், ஆலோசனைகளை வழங்குவர்.

    பிராத்மிக் மற்றும் பிரவீண் உத்தரார்த்த தேர்வர்களுக்கு காலை 9 முதல் 11 மணி வரையிலும், மத்யமா மற்றும் பிரவீண் பூர்வார்த்த தேர்வர்களுக்கு 11 முதல் 1 மணி வரையிலும், ராஷ்டிரபாஷா மற்றும் விஷாரத் உத்தரார்த்த தேர்வர்களுக்கு மாலை 1 முதல் 3 மணி வரையிலும், பிரவேசிகா மற்றும் விஷாரத் பூர்வார்த்த தேர்வர்களுக்கு மாலை 3 முதல் 5 மணி வரையில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுகின்றன. மேலும் விவரங்களுக்கு ஹிந்தி பிரசார சபை தொலைபேசி எண் 0416-2210928-ஐ தொடர்புகொள்ளலாம்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai