சுடச்சுட

  

  ஆற்காடு பெரிய அசேன்புறா பகுதியைச் சேர்ந்தவர் மீரஷா(27). இவருடைய மினி லாரியின் கண்ணாடியை அதே பகுதியைச் சேர்ந்த பாருக் (26) என்பவர் உடைத்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தட்டிக் கேட்ட  மீரஷாவை,பாருக்,(26),முபாரக் (38),மொய்தீன் (53) ஆகியோர் தாக்கினராம்.

  இது பற்றிய புகாரின்பேரில் ஆற்காடு காவல் உதவி ஆய்வாளர் ஜவ்வாது உசேன் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  மணல் திருட்டு: லாரி, ஜேசிபி இயந்திரம் பறிமுதல்

  வேலூர், ஜூலை 30: வேலூரை அடுத்த மேல்மொணவூர் பகுதியில் அனுமதியின்றி மணல் எடுத்த லாரி, ஜேசிபி இயந்திரம் ஆகியவை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

  மேல்மொணவூரில் அனுமதியின்றி மணல் எடுப்பதாக வேலூர் மாவட்ட துணை இயக்குநர் (கனிமம்) கந்தனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அப்பகுதிக்கு செவ்வாய்க்கிழமை சென்றனர். அப்போது அங்கு மணல் எடுத்துக் கொண்டிருந்த ஜேசிபி இயந்திரம் மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டு விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

  தனியார் தொழிற்சாலையில் ரூ.72 ஆயிரம் திருட்டு

  ராணிப்பேட்டை, ஜூலை 30: ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் தனியாருக்கு சொந்தமான இரு சக்கர வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனம் இயங்கி வருகிறது. கடந்த சனிக்கிழமை மாலை பணி முடிந்து தொழிற்சாலையைப் பூட்டி விட்டு சென்றனர். திங்கள்கிழமை காலை தொழிற்சாலையை திறந்தபோது  ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அலுவலக மேசையில் வைக்கப்பட்டிருந்த ரொக்கம் ரூ.72 ஆயிரத்து 496ஐ திருடிச் சென்றது தெரிய வந்தது.

  இது குறித்து சிப்காட் போலீஸில் தொழிற்சாலை மேலாளர் நாராயணசாமி புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  டேனரி தொழிலாளி சாவு

  ஆம்பூர், ஜூலை 30: தனியார் தொழிற்சாலை தொழிலாளி இறந்தது தொடர்பாக ஆம்பூர் தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி (34). இவர் சோலூர் கிராமத்தில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.  திங்கள்கிழமை பிற்பகல் வேலைக்கு சென்றவர், இரவு சுமார் 7.45 மணிக்கு தொழிற்சாலை வளாகத்தில் உள்ள கழிவறையில் விழுந்து கிடந்துள்ளார்.  அவரை மீட்டு ஆம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அவரை பரிசோதித்த டாக்டர்கள், தண்டபாணி ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீஸில் அவரது சகோதரர் குமரவேல் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கார் மோதி தொழிலாளி சாவு

  ஆம்பூர், ஜூலை 30: பள்ளிகொண்டா அருகே கார் மோதிய விபத்தில் தொழிலாளி திங்கள்கிழமை இறந்தார்.

  பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (29), கட்டடத் தொழிலாளி. இவர் கடந்த ஜூலை 28-ம் தேதி அணைக்கட்டிலிருந்து கந்தனேரிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். கந்தனேரி அருகே தேசிய நெடுஞ்சாலை வளைவில் திரும்பியபோது ஆம்பூரில் இருந்து வேலூர் நோக்கிச் சென்ற கார் பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சங்கர் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை நள்ளிரவு இறந்தார். பள்ளிகொண்டா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai