சுடச்சுட

    

    குடியாத்தம் ரோட்டரி சங்கம் சார்பில் நல உதவிகள் வழங்கும் விழா கே.எம்.ஜி. கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    By குடியாத்தம்  |   Published on : 31st July 2013 01:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடியாத்தம் ரோட்டரி சங்கம் சார்பில் நல உதவிகள் வழங்கும் விழா கே.எம்.ஜி. கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    ரோட்டரி சங்கத் தலைவர் டி.என். ராஜேந்திரன் தலைமை வகித்தார். செயலர் வி. மதியழகன் வரவேற்றார். சென்னை, போரூர் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ஜி. சீனிவாசன், 101 பெண்களுக்கு இலவச சேலைகளையும், நகரில் உள்ள பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகைகளையும், ரோட்டரி மூலம் இலவச தையல் பயிற்சி பெற்ற 51 பெண்களுக்கு மானிய விலையில் தையல் இயந்திரங்களையும் வழங்கினார். ரோட்டரி சங்க நிர்வாகிகள் கே. ஜவரிலால் ஜெயின், கே. சுகுமார், என்.எஸ். மணி, ஏ.ஜே.ஏ. கார்த்திகேயன், பி.எல்.என். பாபு, டாக்டர் எம்.எஸ். திருநாவுக்கரசு, வி.என். அண்ணாமலை, கே. குணசேகரன், கே.எம். ராஜேந்திரன், எம். கோபிநாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai