சுடச்சுட

    

    ஜோலார்பேட்டை அருகே சமைக்கும் போது குழம்பில் விழுந்து காயமடைந்த குழந்தை சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்தது.

    ஜோலார்பேட்டையை அடுத்த காவேரிப்பட்டு பகுதியைச் சேரந்தவர் தென்னரசு, தொழிலாளி. இவரது மனைவி மாலினி. இவர்களது மகன் சங்கை (3), 11 மாத குழந்தை மவ்சிதா. கடந்த ஜூலை 21ஆம் தேதி மாலினி சமையல் செய்து கொண்டிருந்த போது குழம்புப் பாத்திரம் சாய்ந்து மாலினியின் காலில் கொட்டியதாம். அப்போது மாலினியின் இடுப்பிலிருந்த குழந்தை மவ்சிதா கிழே சரிந்து குழம்பில் விழுந்துள்ளது.

    இதில் பலத்த காயமடைந்த மவ்சிதாவை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை அங்கு செவ்வாய்க்கிழமை இறந்தது.

    இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வரு

    கின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai