சுடச்சுட

    

    "கைது நடவடிக்கைகளால் பாமக புத்துணர்வு பெற்றுள்ளது'

    By அரக்கோணம்,  |   Published on : 31st July 2013 01:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாமகவினர் மீதான கைது நடவடிக்கைகளால் கட்சி புத்துணர்வு பெற்றுள்ளது என குண்டர் சட்டத்தில் கைதாகி விடுதலையான வேலூர் கிழக்கு மாவட்ட பாமக செயலர் க.சரவணன் கூறினார்.

    வேலூர் மத்திய சிறையில் இருந்து செவ்வாய்க்கிழமை விடுதலையான க.சரவணன், வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வரவேற்பு நிகழச்சிகளுக்குப் பிறகு தனது சொந்த ஊரான அரக்கோணத்தை அடுத்த காவனூர் நரசிங்கபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியது:

    காஷ்மீர் போன்ற மாநிலங்களில் பயங்கரவாதிகள் மீது பாயும் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாமகவினர் மீது பாய்ந்துள்ளது. இது போன்ற கைது நடவடிக்கைகளால் எங்கள் கட்சி புத்துணர்வு பெற்றுள்ளது என்றார்.

    இக்கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ இளவழகன், மாநில துணைப் பொதுச்செயலர் எம்.கே.முரளி, காஞ்சிபுரம் மாவட்டச் செயலர் பரந்தூர் சங்கர், மாவட்டத் தலைவர் அ.ம.கிருஷ்ணன், செயலர் சி.ஜி.ராமசாமி, மாநில வன்னியர் சங்கத் துணைத் தலைவர் மின்னலான், சங்க மாவட்டச் செயலர் கோ.ஏழுமலை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai