சுடச்சுட

    

    வள்ளிமலை கோயில் குளத்தில் மூழ்கி இளைஞர்  இறந்தார்.

    பேர்ணாம்பட்டை அடுத்த ஏரிகுத்தி கிராமத்தைச் சேர்ந்த முருக பக்தர்கள் ஆடிக் கிருத்திகைக்காக திருத்தணி சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை காலை வள்ளிமலை முருகன் கோயிலுக்கு வந்துள்ளனர். இதில், முனிரத்தினம் மகன் நந்தகுமார் (19)  குளத்தில் குளித்தபோது, நீரில் மூழ்கியுள்ளார்.

    இதுகுறித்து அவரது அண்ணன் சிவக்குமார் உடன் வந்த உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கோயில் மேலாளர் நித்தியானந்தம் அளித்த தகவலின்பேரில் சிப்காட் தீயணைப்பு நிலையத்தினர் வந்து குளத்தில் மூழ்கிய இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    சுமார் 4 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு நந்தகுமாரின் சடலத்தை மீட்டனர். மேல்பாடி போலீஸார் சடலத்தைப் பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்துள்ளனர்.

    வேலூர் வருவாய்க் கோட்டாட்சியர் நா.சண்முகசுந்தரம் நேரில் விசாரணை நடத்தினர். கோயம்புத்தூரில் பியூட்டி பார்லர் ஒன்றில் பணிபுரிந்து வந்த நந்தகுமார், ஆடிக் கிருத்திகை விழாவுக்காக திங்கள்கிழமை காலைதான் ஏரிகுத்தி கிராமத்துக்கு வந்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai