Enable Javscript for better performance
கோலம் போட்ட ஆசிரியையிடம் 3 சவரன் பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    : வேலூரில் செவ்வாய்க்கிழமை காலை வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த ஆசிரியையின் கழுத்தில் இருந்த 3 சவரன் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பறித்துச் சென்றனர்.

    வேலூர், சலவன்பேட்டை, மாசிலாமணி முதலியார் தெருவில் வசிப்பவர் தனியார் பள்ளி ஆசிரியை சுமதி (42). இவர் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், ஆசிரியை கழுத்தில் இருந்த 3 சவரன் சங்கிலியை பறித்துக் கொண்டு தலைமறைவாயினர்.

    இதனால் அவரது கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த வீடுகளை சேர்ந்தோர் ஓடி வந்து அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai