சுடச்சுட

    

    சிறப்பு நிலை ஆணையை விரைந்து வழங்க தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை

    By வேலூர்,  |   Published on : 31st July 2013 01:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு சிறப்பு நிலை ஆணையை விரைந்து வழங்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர் செங்குட்டுவனை தமிழ்நாடு மேனிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தினர் திங்கள்கிழமை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

    இதுகுறித்து சங்கத்தின் மாவட்ட செய்தி தொடர்பாளர் க.ராஜா வெளியிட்ட அறிக்கை:

    தமிழக அரசு தொழிற்கல்வி ஆசிரியர் சங்கங்களின் பேச்சுவார்த்தைகளை ஏற்று, தொழிற்கல்வி ஆசிரியர்கள் தர ஊதியம் பெறுவதற்கு ஏற்றவாறு அரசாணை எண்.263-ஐ 22.7.2013 அன்று வெளியிட்டது. இந்த ஆணையுடன் முதன்மைக் கல்வி அலுவலர் செங்குட்டுவனை சங்கத்தினர் திங்கள்கிழமை சந்தித்தனர்.

    அரசின் ஆணையை விரைந்து நிறைவேற்றி உதவுமாறு சங்கத்தினர் கேட்டுக் கொண்டனர். மனுவை பெற்றுக்ùôண்ட அவர், ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு சிறப்பு நிலை ஆணை வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

    இச்சந்திப்பில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.ரவிவர்மன், செயலர் ஏ.எஸ்.நேரு, பொருளாளர் எம்.நாகலிங்கம், ஒருங்கிணைப்பாளர் கே.செல்வராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர் கே.ஜி.செல்வம் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai