சுடச்சுட

    

    நளினியை நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 6-ல் ஆஜர்படுத்த உத்தரவு

    By வேலூர்,  |   Published on : 31st July 2013 03:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் மத்தியச் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி நளினியிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், அவரை ஆகஸ்ட் 6ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி தனிச்சிறையில் உள்ளார். அவரது அறையில் 2010-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி சிறைத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு செல்போன் மற்றும் சிறுகத்தியை கைப்பற்றினர்.

    இதுகுறித்து பாகாயம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த வழக்கு விசாரணை வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் கடந்த மாதம் வந்தது. நளினியை ஜூலை 29-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான சம்மன் அனுப்பப்பட்டது.

    ஆனால் இவ்வழக்கில் பாகாயம் போலீஸார் நளினியை கைது செய்யவில்லை. இதனால் நளினியை திங்கள்கிழமை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. இதையடுத்து மாஜிஸ்திரேட் மும்மூர்த்தி, வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai