சுடச்சுட

    

    வேலூர் அருகே பணம் கேட்டு இளைஞரை காரில் கடத்திச் சென்றதாக 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

    விரிஞ்சிபுரம் போலீஸார் திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொய்கை பகுதியில் சென்ற காரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் இளைஞர் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டார்.

    இதையடுத்து போலீஸார் காரில் வந்த 7 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். கை, கால் கட்டப்பட்டிருந்த இளைஞர் விரிஞ்சிபுரத்தை சேர்ந்த ராஜ்குமார் (32) என்பதும், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் அவரிடம் நண்பர்களாக பழகிய சிலர் ரூ.1 லட்சம் பணம் கேட்டு காரில் கடத்திச் சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து வேலூர், தோட்டப்பாளையம் அசோக் (31), ஜெயப்பிரகாஷ் (20), காகிதப்பட்டரையைச் சேர்ந்த ஏழுமலை (27), சென்னையைச் சேர்ந்த பரத் (23), அம்பத்தூரைச் சேர்ந்த மகேஷ், விரிஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (23), செந்தமிழன் (25) ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai