சுடச்சுட

  

  போலி கையெழுத்திட்டுரூ.1.10 லட்சம் முறைகேடு:ஊராட்சி செயலர், ஊழியர் கைது

  By வேலூர்,  |   Published on : 31st July 2013 03:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  போலி கையெழுத்திட்டு ஊராட்சி நிதி ரூ.1.10 லட்சத்தை முறைகேடு செய்ததாக ஊராட்சி செயலர் மற்றும் ஊழியர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

  ஆற்காட்டை அடுத்த திமிரி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பாளையம் ஊராட்சியில் 2011-ம் ஆண்டில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நிறைவேற்றியதாக ரூ.1.10 லட்சம் பணம் வங்கியில் இருந்து தனி நபர் ஒருவருக்கு பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. குறிப்பிட்ட பணி நடைபெறாமல் இந்த பணப்பரிமாற்றம் நடந்துள்ளது ஆய்வில் தெரியவந்தது. அத்துடன் இப்பணப் பரிமாற்றத்துக்காக காசோலையில் போடப்பட்டிருந்த ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் மற்றும் திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரின் கையெழுத்துகள் போலியானவை என்பதும் தெரியவந்தது.

   இதுகுறித்து திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர் சூரியகலா அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

  இதில் திமிரி ஒன்றியத்தில் நிர்மல் பாரத் அபியான் திட்டத்தில் பணிபுரியும் பாலுசாமி (35) மற்றும் பாளையம் ஊராட்சி செயலர் விநாயகம் (38) ஆகியோர் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. காசோலையில் உள்ள கையெழுத்துகளை பாலுசாமி போலியாக போட்டுள்ளது தடய அறிவியல் பரிசோதனையில் உறுதிபடுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இருவரும் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai