ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிய பணத்தில் 14 கள்ளநோட்டுகள்
By வேலூர், | Published on : 31st July 2013 03:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
: வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிய பணத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 14 இருந்ததாக வேலூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரிடம் ரிசர்வ் வங்கி அதிகாரி புகார் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர், இந்தியன் வங்கிக் கிளையில் இருந்து இம்மாதம் 17-ம் தேதி சென்னை ரிசர்வ் வங்கிக்கு பணக்கட்டுகள் அனுப்பப்பட்டனவாம். இவற்றை சரிபார்த்தபோது 500 ரூபாய் கட்டுகளில் 14 கள்ளநோட்டுகள் இருந்துள்ளன.
இதுகுறித்து வேலூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரிடம் சென்னை ரிசர்வ் வங்கி அதிகாரி கே.எச்.ஜோஷி திங்கள்கிழமை புகார் தெரிவித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.