சுடச்சுட

  

  விடுதலை செய்யப்பட்ட பாமக மாவட்டச் செயலருக்கு வரவேற்புவேலூர்

  By வேலூர்  |   Published on : 31st July 2013 01:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குண்டர் சட்டத்தில் கைதாகி வேலூர் மத்தியச் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட வழக்குரைஞர் சரவணனுக்கு பாமக நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளித்தனர்.

  விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தச் சென்ற பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து வடமாவட்டங்களில் பல இடங்களில் பஸ்கள் தாக்கப்பட்டன. இது தொடர்பாக பாமகவினர் பலர் கைது செய்யப்பட்டனர். முக்கிய நிர்வாகிகள் பலர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதில் வேலூர் கிழக்கு மாவட்டச் செயலர் வழக்குரைஞர் சரவணனும் ஒருவர்.

  சரவணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது மனைவி சரண்யா வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சரவணன் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை திங்கள்கிழமை ரத்து செய்தனர்.

  இதையடுத்து சரவணன் வேலூர் மத்தியச் சிறையில்  இருந்து செவ்வாய்க்கிழமை விடுதலையானார். அவரை முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஆர்.வேலு, முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி.சண்முகம், அணைக்கட்டு எம்எல்ஏ ம.கலையரசு, மாநில துணை பொதுச் செயலர் எம்.கே.முரளி உள்ளிட்ட திரளானோர் வரவேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai