ஆம்பூர் பகுதியில் தொலைபேசி கட்டணம் நிலுவைத் தொகையை வசூலிக்க வேலூர் மாவட்ட பிஎஸ்என்எல் நிர்வாகம் மற்றும் ஆம்பூர் வட்ட சட்டப் பணிகள் குழு இணைந்து மக்கள் நீதிமன்றத்தை சனிக்கிழமை நடத்தவுள்ளன. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டப் பணிகள் குழு அலுவலகத்தில் மக்கள் நீதிமன்றம் காலை 10 மணி முதல் நடைபெறும்.