வேலூர் அருகே இரு கார்கள் ஒன்றையொன்று தேசிய நெடுஞ்சாலையில் முந்திச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.
கொணவட்டம் பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரு நோக்கி ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட இரு கார்கள் வியாழக்கிழமை நள்ளிரவு சென்றன. அப்போது ஒன்றையொன்று விரட்டிச் சென்றபோது எதிர்பாராது சாலை தடுப்புவேலியில் மோதிக் கொண்டதில் இரு கார்களும் விபத்துக்குள்ளாயின.
இதில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் பொறியியல் கல்லூரி மாணவர்களாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.