குடியாத்தம் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ரோட்டரி தலைவர் டி.என். ராஜேந்திரன் தலைமை வகித்தார். செயலர் வி. மதியழகன் வரவேற்றார். சங்கத்தின் புதிய தலைவராக பி.பி. சத்தியநாராயணன், செயலராக பி. அன்பரசு, பொருளாளராக கே. சந்திரன், துணை ஆளுநராக என். சத்தியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர்.
ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் எஸ்.வி.ஆர்.எம். ராமநாதன், வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பா. செங்குட்டுவன், நகர்மன்றத் தலைவர் அமுதா சிவப்பிரகாசம், வேலூர் ஆடிட்டர் கே. பாண்டியன், துணை ஆளுநர் ரமேஷ் வோரா, அம்பாலால் குழுமங்களின் தலைவர் கே. ஜவரிலால் ஜெயின், அடுத்த ஆண்டுத் தலைவர் ஜே.கே.என். பழனி, அரசு வழக்குரைஞர் கே.எம். பூபதி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
ரோட்டரி நிர்வாகிகள் டாக்டர் எம்.எஸ். திருநாவுக்கரசு, கே. சுகுமார், என்.எஸ். குமரகுரு, என். மோகன், கே. குணசேகரன், டி.ராஜேந்திரன், நடிகர் அன்வர் அலிகான், எல்.ஐ.சி. கண்ணன், எஸ். வேல்முருகன், எம்.எஸ். அமர்நாத், எம். பரத்குமார், வி. சேட்டு, எம். கோபிநாத், தீபம் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.