அரக்கோணத்தை அடுத்த காவனூரில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
காவனூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர் தேன்மொழி தலைமை தாங்கினார்.
இதில் எம்.எல்.ஏ சு.ரவி பங்கேற்று 48 கர்ப்பிணிகளுக்கு சேலை, பழம், மஞ்சள்,குங்குமம், தாலி உள்ளிட்ட சீர்வரிசையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஏ.பி.எஸ்.லோகநாதன், காவனூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஜீவநேசன், துணைத் தலைவர் ஆர்.கோபி, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சேகர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இரண்டாம் நிலை மேற்பார்வையாளர்கள் சமாதான பிரபு, எல்லம்மா, ஊராட்சி செயலர் தேவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.