குடியாத்தம் வட்ட ஜமாபந்தி வியாழக்கிழமை நிறைவுற்றது. இதில் 66 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஜமாபந்தி, வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 18 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. நிறைவு விழாவுக்கு வேலூர் கோட்டாட்சியரும், ஜமாபந்தி அலுவலருமான ஆர். பட்டாபிராமன் தலைமை வகித்தார். வட்டாட்சியர் வி. கமலக்கண்ணன் வரவேற்றார். சட்டப் பேரவை உறுப்பினர் கு. லிங்கமுத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
ஒன்றியக் குழுத் தலைவர் லட்சுமி சுகுமாரன், துணைத் தலைவர் சி.ஏ. ஏகாம்பரம், சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் கே. விஜயன், மூங்கப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் கே. சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போஜனாபுரம் ஊராட்சி மக்கள் மனு
போஜனாபுரம் ஊராட்சியில் ரூ. 38 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. புதிய கட்டடத்தை அதிகாரிகள் வேறு ஒரு இடத்தில் கட்ட வேண்டும் என்கிறார்களாம்.
புதிய கட்டடத்தை பொதுமக்கள் நலன்கருதி, தற்போது சீவூரான்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வரும் வாடகைக் கட்டடத்துக்கு அருகில் கட்ட வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பிரமணி மற்றும் அப்பகுதி மக்கள், சட்டப் பேரவை உறுப்பினர் மற்றும் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.