அரக்கோணம், செப். 23: அரக்கோணம் நகர்மன்றத் தலைவராக தேர்தலில் வெற்றி பெற்ற எஸ்.கண்ணதாசன் புதன்கிழமை பதவியேற்கிறார்.
அரக்கோணம் நகர்மன்றத் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.கண்ணதாசன், இன்று காலை 9 மணி அளவில் அரக்கோணம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெறும் விழாவில் நகர்மன்றத் தலைவராக பதவியேற்றுக் கொள்கிறார். இத்தகவலை அரக்கோணம் நகராட்சி ஆணையர் விஜயகுமாரி தெரிவித்தார்.
இதில் அரக்கோணம் எம்.பி. கோ.அரி, எம்.எல்.ஏ. சு.ரவி, அதிமுக மாவட்டச் செயலரும், சோளிங்கர் நகர கூட்டுறவு வங்கித் தலைவருமான என்.ஜி.பார்த்தீபன், நகர்மன்ற உறுப்பினரும், அதிமுக நகரச் செயலருமான துரைகுப்புசாமி, நகர்மன்ற உறுப்பினர்கள், நகர அதிமுக நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொள்ள உள்ளனர்.