ஒன்றிய கருத்தாளர்களுக்கான பயிற்சி

வாலாஜா ஊராட்சி ஒன்றிய மகளிர் திட்டம், ஏகம் அறக்கட்டளை இணைந்து மாவட்ட அளவிலான மகளிர் திட்ட ஒன்றிய
Published on

வாலாஜா ஊராட்சி ஒன்றிய மகளிர் திட்டம், ஏகம் அறக்கட்டளை இணைந்து மாவட்ட அளவிலான மகளிர் திட்ட ஒன்றிய கருத்தாளர்களுக்கான பயிற்சியை வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தின.

பயிற்சியினை வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோசப் கென்னடி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பயிற்சியின் போது தேசிய ஊரக நலவாழ்வு இயக்கம் சார்பாக கிராம நலவாழ்வு நீர் துப்புரவு மற்றும் ஊட்டச்சத்து குழுவுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.

ஏகம் அறக்கட்டளை மண்டல அலுவலர் கோகுலவாசன் முதலமைச்சரின் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், 108 ஆம்புலன்ஸ் சேவை, 104 மருத்துவ ஆலோசனை குறித்த விழிப்புணர்வு ஆலோசனையை வழங்கினார். 

மகளிர் திட்டத் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயஸ்ரீ, ஆதிதிராவிட நல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். வாலாஜா, காவேரிப்பாக்கம், நெமிலி, சோளிங்கர், அரக்கோணம், ஆற்காடு காட்பாடி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு ஒன்றியங்களைச் சேர்ந்த கருத்தாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com