ஆம்பூர், செப். 23: மஹாளய அமாவாசையையொட்டி, விடுதலைப் போராட்ட தலைவர்களுக்கு விஜயபாரத மக்கள் கட்சி சார்பாக தர்ப்பணம் வழங்கும் நிகழ்ச்சி ஆம்பூர் கோதண்டராமர் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கட்சியின் நிறுவனத் தலைவர் கோ.ஸ்ரீ.ஜெய்சங்கர் விடுதலைப் போராட்ட தலைவர்களுக்காக தர்ப்பணம் வழங்கினார். மாவட்டத் தலைவர் எஸ்.கஜேந்திரன், நகரத் தலைவர் எம்.ஆறுமுகம், அலுவலக செயலர் ஏ.எஸ்.ஆனந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆம்பூர் நகர புரோகிதர்கள் சங்கத் தலைவர் பாபு சுப்பிரமணி பூஜையை நடத்தி வைத்தார்.