Enable Javscript for better performance
அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    ஆலங்காயம் பேரூராட்சி மற்றும் ஒன்றிய கிராம பகுதிகளில் அமைச்சர் வீரமணி, எம்எல்ஏ கோவி.சம்பத்குமார் ஆகியோர் வேட்பாளர் செங்குட்டுவனை ஆதரித்து புதன்கிழமை வாக்கு சேகரித்தனர்.

     முன்னதாக பீமகுளம் சென்றாயன் கோயிலில் சிறப்பு பூஜையுடன் பிரசாரம் துவங்கியது. பீமக்குளம் பகுதியில் புறப்பட்ட பிரசாரத்தில் திறந்த வேனில் வேட்பாளர் செங்குட்டுவனை ஆதரித்து அமைச்சர் வீரமணி, எம்எல்ஏ கோவி.சம்பத்குமார் உள்ளிட்டோர் நாயக்கனூர், ஆலங்காயம் பேருராட்சி, பூங்குளம், மரிமாணிக்குப்பம், மிட்டூர், குரிசாலப்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளில் வாக்குகளை சேகரித்தனர். 

     ஒன்றியக்குழுத் தலைவர்கள் எம்.கோபால், திருப்பதி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் லீலாசுப்பிரமணியம், நகர்மன்றத் தலைவர் நீலோபர்கபீல், துணைத் தலைவர் ஆர்.விஜயகுமார்,  தொகுதி செயலாளர் எம்.கே.ராஜா, வாணியம்பாடி நகர செயலாளர் ஜி.சதாசிவம், பேருராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளா கந்தன், பேருராட்சி செயலாளர் பாண்டியன் உள்ளிட்ட பலர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai