Enable Javscript for better performance
கராத்தே போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ்- Dinamani

சுடச்சுட

    

    பள்ளிகொண்டா சிக் ஷா மெட்ரிக் மற்றும் ஐ.சி.எஸ்.இ பள்ளிகளில் ஜப்பான் ஷீட்டோராய் கராத்தே பயிற்சிப் பள்ளி சார்பில் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

     பள்ளித் தலைவர் பி.என்.எஸ்.திருநாவுக்கரசு தலைமை வகித்தார். மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜே.சுஹாசினி வரவேற்றார். பள்ளித் தாளாளர் டி.குகன் போட்டிகளை துவக்கி வைத்தார்.

     அகில இந்திய கராத்தே தலைவரும், திரைப்பட நடிகருமான ஏ.ரமேஷ், மாவட்ட கராத்தே தலைமைப் பயிற்சியாளர் கண்ணன் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர். திரைப்பட நடிகர் கிங்காங்கின் நடன நிகழ்ச்சியும், நடிகர் பெஞ்சமினின் நாடக நிகழ்ச்சியும் நடைபெற்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai