Enable Javscript for better performance
குடிநீர் கேட்டு சாலை மறியல் - Dinamani

சுடச்சுட

    

    வாலாஜா ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட செட்டித்தாங்கல் ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன.

    இதில் வள்ளலார் நகர் பகுதியில் சுமார் 4 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு செட்டித்தாங்கல் ஊராட்சியில் இருந்து பொன்னை குடிநீரும், ஆழ்துளை கிணற்று நீரும் விநியோகிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் 5 மாதங்களாக குடிநீர் சரிவர விநியோகிக்கப்படவில்லையாம். இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலி குடங்களுடன் திரண்டு ராணிப்பேட்டை - செட்டித்தாங்கல் சாலையில் புதன்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

     தகவல் அறிந்து வந்த ராணிப்பேட்டை போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மறியலை கைவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai