Enable Javscript for better performance
சோளிங்கர் அருகே 390 டி சர்ட் பறிமுதல் - Dinamani

சுடச்சுட

    

    சோளிங்கர் அருகே பறக்கும் படை அணி எண் 1 சோளிங்கர் வட்டார வளர்ச்சி அதிகாரி ராஜேஸ்வரி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகாநந்தம் மற்றும் அதிகாரிகள் புதன்கிழமை பாணாவரம் கூட் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் மடக்கி சோதனை செய்தனர். அப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மற்றும் கை சின்னம் பொறித்த 390 டி சர்ட்கள் (பனியன்) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இவை சென்னை கோடம்பாக்கம் கண்ணன் என்பவர் சோளிங்கரில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில்  விநியோகம் செய்ய எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. டி சர்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டு சோளிங்கர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai