Enable Javscript for better performance
திமுகவினர் ஆர்ப்பாட்டம்: கட்சிக் கொடிகள் அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    தேர்தல் நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றி மாநகராட்சி பகுதியில் உள்ள கொடிக் கம்பங்களில் பறக்கும் கொடிகளை அகற்ற ஆட்சியர் உத்தரவிட்டார். இந்நிலையில் வேலூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே இருந்த திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட சில கட்சிக் கொடிக் கம்பங்களில் திமுக கொடிக் கம்பத்தில் இருந்த கொடியை மட்டும் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியதாகக் கூறப்படுகிறது.

     இதையறிந்த திமுகவினர் மாவட்ட அவைத் தலைவர் தி.அ.முகமது சகி, முன்னாள் மேயர் பி.கார்த்திகேயன், முன்னாள் துணை மேயர் சாதிக் பாஷா, நகரச் செயலர் அ.மா.ராமலிங்கம் உள்ளிட்ட திரளானோர் மாநகராட்சி அலுவலகம் முன்பு புதன்கிழமை கூடினர்.

     மற்ற கட்சிகளின் கொடிகள் பறக்கும் நிலையில், திமுக கொடிக் கம்பத்தில் உள்ள கொடியை மட்டும் அகற்றியதைக் கண்டித்தும், பிற கட்சிக் கொடிகளை அகற்ற வலியுறுத்தியும் திமுகவினர் குரல் எழுப்பினர்.

     இதையறிந்த மாநகராட்சி அலுவலர்கள், தெற்கு காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்தில் முகாமிட்டு பிற கட்சிகளின் கொடிகளையும் அகற்றத் தொடங்கினர். அதைத் தொடர்ந்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai