Enable Javscript for better performance
நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கைது- Dinamani

சுடச்சுட

    

    நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கைது

    Published on : 27th March 2014 05:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராணிப்பேட்டையை அடுத்த மேல்வேலம் கிராமத்தில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக கியூ பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் கியூ பிரிவு உதவி காவல் ஆய்வாளர் மகாதேவன் மற்றும் போலீஸார் மேல்வேலம் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். சோதனையின் போது மேல்வேலம் மேட்டுத்தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரானஜெயச்சந்திரன் (50) வீட்டில் உரிய அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

     இதையடுத்து துப்பாக்கியை பறிமுதல் செய்து ஜெயச்சந்திரனை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து ஜெயச்சந்திரனை ராணிப்பேட்டை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai