சுடச்சுட

    

    வேலூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமாரி. இவர் அண்மையில் பெற்றோருக்கு தெரியாமல் தலைமறைவாகி மதம் மாறி தேவாலயம் ஒன்றில் தங்கியிருந்தார்.

    இதையடுத்து பெற்றோர் புகாரின் பேரிலும், இந்து முன்னணி இயக்கத்தினரின் போராட்டத்தாலும் வேலூர் தெற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து அப்பெண்ணை மீட்டு மாஜிஸ்திரேட் முன்பு செவ்வாய்க்கிழமை இரவு ஆஜர்படுத்தினர். அப்பெண்ணை புதன்கிழமை காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மாஜிஸ்திரேட் மும்மூர்த்தி உத்தரவிட்டார்.

     புதன்கிழமை பிற்பகலில் அப்பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பாதிக்கப்பட்ட பெற்றோர் தரப்பில் இந்து முன்னணி வழக்குரைஞர் ரத்தினகுமார் ஆஜராகி, மதம் மாற்றப்பட்ட பெண் மனநிலை சரியின்றி சில காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர். அவரை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பரிசோதனை செய்ய வேண்டும் என மனு அளித்தார்.

    பெண்ணின் தரப்பில் சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் ஆஜரானார்.

    இருதரப்பு வாதத்தையும் கேட்ட மாஜிஸ்திரேட் மும்மூர்த்தி, அப்பெண் சுயமாக முடிவு எடுக்கக் கூடிய வயதுடையவர் என்பதால் அவர் பெற்றோரிடமோ அல்லது அவரது விருப்பப்படி எங்கு தங்க விரும்புகிறாரோ அதை எழுத்துப்பூர்வமாக எழுதித் தந்து செல்லலாம் என உத்தரவிட்டார்.

    அதைத் தொடர்ந்து அப்பெண் தனது விருப்பத்தை எழுதிக் கொடுத்ததை அடுத்து இரும்புலியூர், பெந்தகொஸ்தே தேவாலயத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    வழக்குரைஞர் தகவல்

     பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ரத்தினகுமார், மதம் மாற்றப்பட்ட பெண் மனநலம் பாதித்தவர் என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. கட்டாயமாக அப்பெண் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனவே நாங்கள் பெண்ணின் பெற்றோரிடம் ஆலோசனை நடத்திய பிறகு இவ்வழக்கில் உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளோம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai