Enable Javscript for better performance
மதிமுக தேர்தல் அறிக்கைக்கு கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    இந்தியாவின் பெயரை மாற்றம் செய்ய வேண்டுமென வெளியிடப்பட்டுள்ள மதிமுக தேர்தல் அறிக்கைக்கு விஜய பாரத மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

     இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனத் தலைவர் கோ.ஸ்ரீ.ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை:

    இந்தியா என்பதற்கு பதிலாக இந்திய ஐக்கிய நாடுகள் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இது ஏதோ உள்நோக்கத்துக்காகவும், பிரிவினைக்கு வித்திடுவது போலவும் உள்ளது.

     விஜய பாரத மக்கள் கட்சி இதற்கு கண்டனம் தெரிவிக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai