Enable Javscript for better performance
வாக்களிக்கும் மேஜையில் வாக்காளர் உறுதிமொழி- Dinamani

சுடச்சுட

    

    வாக்குச் சாவடிகளில் வாக்களிக்கும் மேஜையில் உள்ள அட்டைப் பெட்டி தடுப்பில் வாக்காளர் உறுதிமொழி என தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழி வாசகங்கள் ஒட்டப்பட்டிருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

     வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிக்கும் இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும் மேஜையைச் சுற்றி அட்டைகளால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டு அவர்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பது வெளியே தெரியாமல் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். இது கடந்த தேர்தல்களிலும் இருந்த நடைமுறை.

    தற்போது இந்த தடுப்பு அட்டைகளில் உள்பக்கம் வாக்காளர் உறுதிமொழி என தேர்தல் ஆணையம் உருவாக்கி இருக்கும் உறுதிமொழி பிரிண்ட் செய்யப்பட வேண்டும் என தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

     தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்டு இருக்கும் வாசகம்:

    ஜனநாயகத்தின் மீது இணங்கி நடக்கும் நம்பிக்கையுடைய இந்திய குடிமக்களாகிய நாம் நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும் மதம், இனம். ஜாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலின்றியும் வாக்களிப்போம் என உறுதிமொழிகிறோம்.

     இந்த வாசகத்தை வாக்களிப்பு மேஜை தடுப்பு அட்டைகளில் பிரிண்ட் செய்ய தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai