Enable Javscript for better performance
ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுப்பதில் தாமதம் கிராம மக்கள் திடீர் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுப்பதில் தாமதம் கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

    By அரக்கோணம்  |   Published on : 17th April 2015 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் இணையதளப் பிரிவில் கோளாறு ஏற்பட்டதையடுத்து அங்கு பணி நிறுத்தப்பட்டதால் புகைப்படம் எடுக்க வந்திருந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவில் தினமும் வட்டத்துக்கு உள்பட்ட கிராமப் பகுதிகளில் இருந்து வருபவர்கள் காத்திருந்து புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். வியாழக்கிழமை காலை அலுவலகம் திறக்கும் முன்னரே பாராஞ்சி, பாணாவரம் உள்ளிட்ட இரு கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் வந்து காத்திருந்தனர்.

    இந்நிலையில் அலுவலகத்திற்கு வந்த பணியாளர்கள் இணையதள கோளாறு இருப்பதால் அது சரிசெய்யப்பட்ட பிறகே புகைப்படம் எடுக்கும் பணி தொடரும் எனத் தெரிவித்தனர்.

    சுமார் 15 கி.மீ. தூரமுள்ள பாராஞ்சி, 25 கி.மீ தூரமுள்ள பாணாவரத்தில் இருந்து வந்திருந்தவர்கள் பொதுமக்கள் தாங்கள் நெடுந்தூரத்தில் இருந்து வந்திருப்பதாகவும் மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் எனக்கோரி வட்டாட்சியர் அலுவலக வாயிலில் திடீர் என சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து தலைமையிடத்து துணை வட்டாட்சியர் கந்திர்பாவை நேரில் சென்று மறியலில் ஈடுபட்டோரை சமாதானம் செய்தார். இதையடுத்துப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து இணையதளக் கோளாறு ஒரு மணி நேரத்தில் சரிசெய்யப்பட்டு விடும் எனவும், இதையடுத்து முதலில் இந்த கிராம மக்களுக்கு புகைப்படம் எடுக்கும் பணி தொடங்கும் எனவும் கந்திர்பாவை அறிவித்தார்.

    இந்த சாலை மறியல் நடந்த நேரத்தில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்துக்கு அடுத்து உள்ள நகராட்சி அலுவலக வளாகத்தில் செயல்பட்ட ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பிரிவில் இணையதளக் கோளாறு எதுவும் இல்லாமல் பணி தொடர்ந்து நடைபெற்றது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai