Enable Javscript for better performance
ஆந்திரத்தில் பறவை காய்ச்சல்: தமிழக எல்லையில் உஷார் நிலை- Dinamani

சுடச்சுட

    

    ஆந்திரத்தில் பறவை காய்ச்சல்: தமிழக எல்லையில் உஷார் நிலை

    By வேலூர்  |   Published on : 17th April 2015 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆந்திர மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதையடுத்து, ஆந்திர மாநில எல்லையோரம் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தின் சோதனைச் சாவடிகளில் கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவர்கள் நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

    மாநில எல்லையோரம் உள்ள சேர்க்காடு, கிறிஸ்தியான்பேட்டை, பரதராமி, குடியாத்தத்தை அடுத்த சைனகுண்டா ஆகிய இடங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் புதன்கிழமை முதல் கால்நடை மருத்துவர் குழு சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளது.

    இதில் ஒரு கால்நடை மருத்துவர், இரு ஆய்வாளர்கள், இரு உதவியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் ஆந்திர மாநில எல்லையில் இருந்து தமிழக எல்லைக்குள் வரும் வாகனங்கள் அனைத்தையும் நிறுத்தி, டயர்கள், வாகனத்தின் வெளிப் பகுதியில் பறவைக் காய்ச்சல் நோய் கிருமிகளை அழிக்கும் கிருமிநாசினியை தெளித்து அனுப்புகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் இருந்து வெளி இடங்களுக்கும், ஆந்திர மாநிலத்தில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கும் கோழிகள், முட்டைகள், தீவனப் பொருள்கள் போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளனர். அத்துடன் ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக கால்நடைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ஆந்திர மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் நோய் மறையும் வரை இந்த தற்காப்புப் பணி தொடரும் என தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai